குடியிருக்க ஃபிளாட்டைத் தேடும்போது இளைஞர்கள், இளம் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல், நல்லதொரு ரூம் மேட்டை தேர்ந்தெடுப்பதுதான்.
அப்படி ரூம் மேட் தேடி அலைபவர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். அதுதான், ‘ஃபிளாட்சாட்’. (Flatchat)
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ‘ஃபிளாட்சாட்’ என்ற இந்த புதிய ஆப்பை (App) டவுன்லோட் செய்து உங்களது ரூம் மேட்(Room Mate) எப்படி இருக்க வேண்டும் என்பதை பதிவு செய்யவேண்டியது மட்டுமே.
தகவல்களை நீங்கள் பதிந்துவிட்டால் போதும், அதே விருப்பத்துடன் இருக்கும் நபர் உங்களிடம் சாட்(chat) செய்வார். இருவருக்கும் உடன்பாடிருந்தால் ரூம் மேட் ஆகலாம்.
அதுமட்டுமல்லாமல், இந்த அப்ளிகேஷனை உருவாக்கிய நிறுவனம், உங்களுக்கான ஒரு உதவியாளரையும் அளிக்கிறது. உங்களுக்கு ரூம் மேட்டைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால், அவர் உதவியுடன் எளிதாக உங்களுக்கான ரூம் மேட்டை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
தற்போது இச்சேவை மும்பை, டெல்லி, பூனே, பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் குர்கான் ஆகிய நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.