திருப்பதி திருமலைக்கு விரைவில் ரோப் கார் வசதி. ஆகம பண்டிதர்கள் எதிர்ப்பு

திருப்பதி திருமலைக்கு விரைவில் ரோப் கார் வசதி. ஆகம பண்டிதர்கள் எதிர்ப்பு
rope car
உலகிலேயே மிக அதிகம் வருமானம் தரக்கூடிய ஆலயங்களில் ஒன்றாகவும், இந்து மக்களின் புனித தலமாகவும் விளங்கி வரும் திருப்பதி திருமலைக்கு தற்போது சாலை மூலம் மட்டுமே போகும் வசதி இருக்கும் நிலையில், விரைவில் திருமலைக்கு செல்ல ரோப் கார் வசதி செய்யப்படும் என தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுக்கு முன்பே திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அந்த பொறுப்பை அப்போது ஏற்றுக்கொண்ட ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இந்தப் பணியை மேற்கொண்டால் புனித நகரமாக விளங்கும் திருமலை, சுற்றுலாத்தலமாக மாறிவிடும் என பலர் எதிர்க்கருத்து  கூறியதால் அந்த திட்டத்தை கைவிட்டது. மேலும் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது ஆகம விதிக்கு முரணானது என வேத பண்டிதர்கள் அப்போது கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியையும், பழநி போன்ற ஆலயங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலைகளையும் ஆராய்ந்த தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிகளுக்காக ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ரோப் கார் வசதியால் சுற்றுச்சூழல் சீர்கேடு பெருமளவில் குறையும் என்றும் ரோப் } கார் பயன்பாட்டுக்கு வந்தால் பகலில் மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் இதற்கு ஆதரவு அளித்துள்ளதால் விரைவில் திருமலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் திருமலை கோயில் ஆகம பண்டிதர்கள் மட்டும் ரோப் கார் வசதி ஏற்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

English Summary: Rope cable car to tirupati
 

Leave a Reply