டெல்லியை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூர்

டெல்லியை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூர்

Royal Challengers Bangalore player KL Rahul  plays a shot during match 56 of the Vivo Indian Premier League ( IPL ) between the Delhi Daredevils and the Royal Challengers Bangalore held at the Shaheed Veer Narayan Singh International Cricket Stadium, Naya Raipur, India on the 22nd May 2016 Photo by Vipin Pawar / IPL/ SPORTZPICS

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு விராத் கோஹ்லியின் பெங்களூர் அணி தகுதி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது. டே காக் மட்டும் 60 ரன்கள் எடுத்தார்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 54 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகள் எடுத்த பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குஜராத், ஐதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply