ஐ.பி.எல் கிரிக்கெட்: பெங்களூர் அணி அபார வெற்றி. ராஜஸ்தானுக்கு 2வது தோல்வி.

bang vs rajasthanஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராயல் ராஜஸ்தான் அணி, முதலில் பீல்டிங் செய்ய தீர்மானம் செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்மித் 31 ரன்களும், பின்னி 20 ரன்களும், வாட்சன் 26 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி ஒரே விக்கெட்டை மட்டுமே இழந்து 16.1 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 62 ரன்களும், டிவில்லியர்ஸ் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply