ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு போலீஸை நிறுத்தினாலும், பாலியல் வன்முறையை தவிர்க்க முடியாது. அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு

242891-rr-patilவடமாநிலங்களில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருவது நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கும் வேளையில் பாலியல் வன்முறை குறித்து அரசியல்வாதிகள் கூறும் கருத்துக்கள் அதைவிட அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் “பாலியல் வன்முறை செய்யும் முன், தகவல் சொல்லி அனுப்பிவிட்டா அக்குற்றங்களில் ஈடுபடுவார்கள்”? என்று ஏளனமாக பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல் இன்னொரு அமைச்சர், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது ஒருவகையில் தவிர்க்க முடியாத செயல் என்றும் கூறி கடும் சர்ச்சைக்கு ஆளானார்.

இந்நிலையில் இன்று மகாராஷ்ட்ர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வாங்கிக்கட்டி கொண்டுவருகிறார். அவர் இன்று கூறியது இதுதான், “” ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒரு போலீஸாரை நிறுத்தினாலும் பாலியல் வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை நம்மால் தடுக்க இயலாது. இதற்கு தார்மீக ஒழுக்கநெறிகள் குறைந்துவருவதே காரணம்.

இவர் இவ்வாறு கூறிய அடுத்த நிமிடங்களிலேயே இவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தான் கூறிய ஒருசில கருத்துக்கள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply