பீகார் கோவிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் திருட்டு. பெரும் பரபரப்பு

theftபீகார் மாநிலத்தில் உள்ள கதிகர் என்ற மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றில்  ரூ.1 கோடி ரூபாய் மதிக்கத்தக்க அஷ்டலோக சிலைகள் திருடு போயுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோவிலைப்  பூட்டி விட்டு சென்ற முன்னா தாகூர் என்ற பூசாரி மறுநாள் காலை கோவிலைத்  திறக்க முற்பட்டபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்து அவர்கள் வந்தவுடன் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அந்த கோவிலில் கடந்த 90 ஆண்டுகளாக பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் சீதையின் சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தத்  திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் பால்கா போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கோவில் சிலைகளைத்  திருடி சர்வதேச சந்தையில் விற்கும் கும்பல் அல்லது சிலையை உருக்கி அதிலுள்ள வெள்ளி மற்றும் தங்கத்தை எடுக்கும் உள்ளூர் திருடர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply