சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை வெடித்த குண்டு வெடிப்பில் ஸ்வாதி என்ற 24 வயது இளம்பெண் பலியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பலியான ஸ்வாதியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் கார்கே இன்று அறிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியதாவது: “பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘எஸ்4’, ‘எஸ்5’ ஆகிய 2 பெட்டிகளில் இன்று காலை குண்டு வெடித்து உள்ளது. அடுத்தடுத்த நடந்த இந்த இரு குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. பெங்களூரில் இருந்து குண்டூர் நகருக்கு அவர் சென்றபோது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
[carousel ids=”32940,32941,32942,32943,32944,32945,32946,32947,32948,32949,32950,32951,32952″]
இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமும், 7 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவர்களுடைய அனைத்து மருத்த்வ செலவையும் ரெயில்வே துறை ஏற்றுக் கொள்ளும்.
இன்று காலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக டெல்லியில் இருந்து நிபுணர் ஒருவர் இன்று மாலை சென்னைக்கு வருகிறார். குண்டுவெடிப்பு தொடர்பாக ரெயில்வே வாரியமும், தமிழக போலீசாரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயில்வே சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விரிவான அறிக்கை கிடைத்த பிறகே குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து தெரியவரும்