நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி திமுக சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
நீட்தேர்வு அச்சம் காரணமாக நேற்று மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலரும் அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்
முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனுஷ் மரணத்திற்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரூபாய் 10 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது