3 நாட்கள் விடுமுறை எதிரொலி. ஒரே நாளில் ரூ.130 கோடிக்கு மதுவிற்பனை.

tasmac

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் தேர்தலை ஒட்டி 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை ரூ.130 கோடிக்கு மதுவிற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

நேற்று சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக கடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் கூட்டம் இருந்தது. மூன்று நாட்களுக்கும் சேர்த்து இருப்பு வாங்கி வைக்க மதுப்பிரியர்கள் அலைமோதினர். குறிப்பாக திருவல்லிக்கேணி, மைலாப்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், தியாகராயநகர், வடபழ்நி,கோயம்பேடு ஆகிய பகுதிகள் இரவு 7 மணியில் இருந்து கூட்டம் மிக அதிகளவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் மதுபார்களிலும், எலைட் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இரவு எட்டு மணிக்கே ஸ்டாக் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மூன்று நாட்கள் நடக்கவேண்டிய மதுவிற்பனை நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் 60 முதல் 80 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடக்கும். ஆனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை 130 கோடி ரூபாயை எட்டியது. நேற்று வழக்கத்தைவிட 50 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடந்தது.

Leave a Reply