தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி ரயில்வே திட்டங்கள் ரத்து. ரயில்வே அமைச்சகம் அதிரடி

trainகடந்த சில ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.

1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை 260-கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கவே இல்லை

இதையடுத்து பணிகள் தொடங்காத 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்ட உள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயிவே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply