திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள்: முதலமைச்சரின் நிதியுதவி அறிவிப்பு

mk stalin 1200

திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள்: முதலமைச்சரின் நிதியுதவி அறிவிப்பு

திருப்போரூர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிதி உதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி முருகேஷ் விஜய் மற்றும் உதயகுமார் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்