மோடியிடம் டீ வாங்கி குடித்தவருக்கு ரூ.2 லட்சம். திக்விஜய் சிங் அறிவிப்பு
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒருகாலத்தி டீ விற்றவர் என்றும் டீ விற்றவர் தற்போது பிரதமராகியுள்ளார் என்றும் பாஜகவின் பெருமையாக கூறுவதுண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி டீ கடை போன்று பல டீக்கடைகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் மோடி டீ விற்றதை யாராவது பார்த்ததுண்டா? அவரிடம் டீ வாங்கி குடித்த யாராவையாவது என்னிடம் அழைத்து வந்தால் அவருக்கு ரூ.2 லட்சம் தர தயார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ‘சாய் கி சர்சா’ என்ற விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திக்விஜய்சிங், ”நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தன்னை டீக்கடைக்காரர் என்று மக்களிடம் பிரசாரம் செய்தார். ஆனால் மோடி டீ விற்றதை யாராவது பார்த்தது உண்டா? அவரிடம் டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள், நான் ரூ.2 லட்சம் தருகிறேன்.
இதேபோல், பிரதமர் மோடி மேல்நிலைக் கல்விவரை மட்டும் படித்து இருப்பதாக ஒருமுறை சொன்னார். இப்போது அவர் தன்னை பட்டதாரி என கூறிக்கொள்வது வியப்பாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என்று கூறினால், கண்டிப்பாக அவருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் பரிசு சன்மானம் அளிக்கப்படும்” என்று கிண்டலாக பேசினார். திக்விஜய்சிங்கின் இந்த பேச்சு பாஜகவினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rs.2 lakhs to anyone who bought tea from PM?