இந்தியாவில் விரைவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு. சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

இந்தியாவில் விரைவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு. சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

currencyஇந்தியாவில் கருப்புப்பணம் அதிகம் புழங்குவதால் ஆயிரம் ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழுந்து வரும் நிலையில் புதியதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிடவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி ,மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தால் இந்தியாவில் கருப்புப்பண நடமாட்டத்தை தடுக்கவே முடியாது என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Leave a Reply