பீர் பாட்டிலில் ஆணி. ரூ.30,000 நஷ்ட ஈடு தர நீதிபதி உத்தரவு.

திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் ஒன்றில் ஆணி இருந்ததாக டாஸ்மாக் நிறுவனம் மீது தொடர்ந்த வழக்கில் ரூ.30000 அபராதம் விதித்து நேற்று கோவை நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

திருப்பூரை அடுத்து அவினாசியில் நாகராஜ் என்பவர் டாஸ்மாக் கடை எண் 16&6&12 என்ற கடையில் பீர் வாங்கினார். பீரை கிளாஸில் ஊற்றியபோது அதில் ஒரு பெரிய ஆணி இருந்தது தெரியவந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த நாகராஜ், இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் புகார் செய்தார். ஆனால் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியதால் உடனடியாக கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டுள்ளது. பீர் பாட்டிலில் ஆணி இருந்தது நிரூபிக்கப்பட்டதையும், ஊழியர்களின் அலட்சிய பதிலையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, நாகராஜுக்கு ரூ.30000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். இந்த தொகையினை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் கடை ஆகியவை இணைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply