வருமான வரித்துறை ரெய்டு: சென்னை அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

வருமான வரித்துறை ரெய்டு: சென்னை அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கத்தை கண்டுபிடித்துள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள கோட்ட பொறியாளர் இளங்கோவனின் அலுவலகத்தில் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சென்னை, அருப்புக்கோட்டை, உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சோதனையில் கணக்கில் வராத 105 கிலோ தங்கம், ரூ.174 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை அரசு அலுவலகத்திலும் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply