சட்டமன்றத்திற்கு தாமதமாக வந்தால் ரூ.500 அபதாரம். ராஜஸ்தான் முதல்வர் அதிரடி

vasundhara-raje-pardaphash-161798சட்டசபை நடக்கும் நாட்களில் சட்டமன்றத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல்,  எம்.எல்.ஏ.க்கள் தாமதமாக வந்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இருக்கும் வசுந்தரா, சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தாமதமாக வருவது குறித்து கேள்விப்பட்டு கடும் எரிச்சல் அடைந்துள்ளார். பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் உள்பட அனைவரும் தாமதமாக வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய முதல்வர் இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சட்டமன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் அவைக்கு தாமதமாக வரும் எம்.எல்.ஏ.க்கள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தாமதமாக வரும் எம்.எல்.ஏக்களுக்கு இந்த தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் வசுந்தரா எடுத்துள்ள அதிரடி  முடிவுக்கு ராஜஸ்தான் பா.ஜ.க. வினரும், மக்களும் பெருத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply