கொரோனா நிவாரண பணிக்கு ஆட்டோவில் சென்ற நர்சுகளுக்கு அபராதம்: அதிர்ச்சித் தகவல்
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் பொது வெளியில் நடமாட வேண்டாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன
ஆனால் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக ஆட்டோவில் சென்ற நர்சூகளிடம், அவர்கள் நர்சுகள் என்று தெரியாமல் அவர்களிடம் வலுக்கட்டாயமாக ரூபாய் 500 அபராதத்தை போலீசார் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது
இதுபோன்ற தவறுகள் நடந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆட்டோவில் சென்ற அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு ரூ.500 அபராதம்- கரோனா பணிக்கு சென்றவர்களிடம் கருணை காட்டாத போலீஸார்.
இந்த தவறுகள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதை தமிழக முதல்வர் @CMOTamilNadu
விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்https://t.co/y0CTAXy5ii#देश_मांगे_न्याय— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 26, 2020