ஆந்திராவின் போக்குவரத்து அதிகாரிக்கு ரூ.800 கோடி சொத்தா? அதிரடி சோதனையில் அதிர்ச்சி தகவல்

ஆந்திராவின் போக்குவரத்து அதிகாரிக்கு ரூ.800 கோடி சொத்தா? அதிரடி சோதனையில் அதிர்ச்சி தகவல்

ACB-Seizes-Rs-800-in-andhra-pradeshஆந்திராவில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு ரூ.800 கோடி சொத்துக்கள் இருப்பதாக அதிரடி சோதனையில் தெரியவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையருக்கு எப்படி ரூ.800 கோடி சொத்து வந்தது என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநில ஊழல் தடுப்பு அமைப்பினர் நேற்று திடீரென மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஏ.மோகன் என்பவருக்கு சொந்தமான 9 வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவருக்கு சுமார் ரூ.800 கோடி அளவுக்கு அவர் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய விசாரணை அமைப்பின் டி.எஸ்.பி. ஏ.ரமாதேவி மோகன் தலைமையிலான குழு தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 வீடுகளில் வியாழன் மற்றும் வெள்ளியன்று அதிரடி சோதனை மேற்கொண்டார். கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஏ.மோகன் தனது மூத்த மகள் பெயரில் 8 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகவும் இந்த சோதனையில் தெரிய வந்தது.

இன்னும் அவரது வங்கி லாக்கர்கள் பல திறக்கப்படவில்லை என்றும் அதனைத் திறந்தால் இன்னும் பல சொத்துக் குவிப்பு குறித்த தகவல்கள் தெரியவரலாம் என்று ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கருதுகின்றனர். “ஆவணங்களில் உள்ள முகவரிகளைக் கொண்டு இவர் நடத்தும் 8 நிறுவனங்களைத் தடம் காண முடியவில்லை” என்று டி.எஸ்.பி ரமாதேவி கூறியுள்ளார்.

.

Leave a Reply