சுவிஸ் நாட்டில் ஒரே வங்கியில் இந்தியர்களின் ரூ.8 ஆயிரம் கோடி. அதிர்ச்சி தகவல்

சுவிஸ் நாட்டில் ஒரே வங்கியில் இந்தியர்களின் ரூ.8 ஆயிரம் கோடி. அதிர்ச்சி தகவல்

swiss.chennaitodaynews.comசுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் ஆயிரக்கணக்கான கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விபரங்களை மத்திய அரசு பெறுவதற்காக சுவிஸ் நாட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் ஒரே ஒரு வங்கியில் மட்டும் இந்தியர்கள் ரூ.8ஆயிரம் கோடி பதுக்கி வைத்திருப்பது குறித்த தகவல் தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, இந்தியர்களின் பணம் ரூ.8 ஆயிரம் கோடி ஒரே வங்கியில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இந்த வங்கியில் கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.

மேலும் சுவிஸ் நாட்டில் உள்ள பல வங்கிகளிடம் இந்தியர்களின் பணம் குறித்த தகவல்கள் கேட்டிருப்பதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணத்தை பதுக்கிய பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Rs.8000 crores Indian black money in Swiss bank

Leave a Reply