பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காகவே ஒரு தனி இலாகாவை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளது. அந்த இலாகாவிற்கு உமாபாரதி அமைச்சராக உள்ளார். புனிதமான கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், நீர்வளத்துறை அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 4 அமைச்சகங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, தனது சொந்த ஊரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருக்கின்றது. இதற்கு ரூ.1 லட்சம் கோடி வரை வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டம் இன்னும் 4 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என எதிர்க்கின்றேன்” என்று கூறியுள்ளார்.