ஆசை வார்த்தகைகளுக்கு மயங்கி பிற மதத்திற்கு தாவிய இந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளார். மதம் மாறிய இந்துக்களை மீண்டும் தாய் மதத்திற்கு மீட்டெடுப்பதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறிய அவர் இந்த கருத்து தன்னுடைய சொந்த கருத்து என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் விஷ்வ ஹிந்து பரிசத் நடத்திய மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட் உபேசிய மோகன் பகவத் கூறியதாவது: “மதமாற்றம் தவறு என பேசுபவர்கள் ஏன் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பதில்லை” என கேள்வி எழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் டொகாடியா, ‘மேற்குவங்கத்துக்குள் வங்கதேசத்திலிருந்து மக்கள் ஊடுருவுவதை தடுக்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறாக ஊடுருபவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடனேயே நுழைகின்றனர். இதை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஒரே ஒரு பசுகூட வதைக்கப்பட அனுமதிப்பதில்லை என அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.