சகிப்புத்தன்மை குறித்து விருதுபெற்ற அறிவுஜீவிகள் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்
சாகித்ய விருது வாங்கும் அளவுக்கு அறிவுஜீவிகளாக இருக்கும் எழுத்தாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என விருதுகளை திருப்பியளித்த எழுத்தாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சார பிரமுகர் மன்மோகன் வைத்யா பேட்டி ஒன்றில் கூறியதாவது:
“அறிவுஜீவிகளுக்கு ஆண்டாண்டு காலமாகவே சங் பரிவார் அமைப்புகள், இந்து மதம் மீது சகிப்புத்தன்மை இல்லை. ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் சிலர் இந்து மதத்தின் மீதும் சங்பரிவார் அமைப்புகள் மீதும் சகிப்புத்தன்மையின்மையை கடைபிடித்து வருகின்றனர். அவர்களை இவ்வளவு ஆண்டுகளாக நாங்கள் சகித்துக் கொண்டே இருந்திருக்கிறோம். ஆனால், அவர்கள் இப்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் எங்களை புறக்கணித்தாலும்கூட மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். பொது மக்கள் காட்டும் பெரும் ஆதரவை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் விளைவாகவே, விருதுகளை திருப்பியளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.
“இப்போது கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டபோதும், கோத்ராவில் ராம் சேவகர்கள் கொல்லப்பட்டபோதும் எங்கே சென்றனர்?” என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஒருவர் எழுத்தாளர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.