அம்மா சமாதியில் ஆவியின் அழுகுரலா?
கடந்த 5ஆம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் நினைவக வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் இரவு முழுவது அழுகுரல் சத்தம் கேட்டு வருவதாகவும் ஒருசில நேரங்களில் முனங்கல் சத்தமும் கேட்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அது அழுகுரல் அல்ல கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டிருப்பதால் அலையின் சத்தம் அவ்வாறு கேட்பதாகவும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இந்த செய்திக்கு பின்னர் இரவு நேரங்களில் சமாதியை பார்க்க வருபவர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றதாம். தமிழக மக்களை விட்டு சென்று விட்டோமே என்ற கவலையில் ஜெயலலிதா அழுது கொண்டிருப்பதாக மிக வேகமாக வதந்தி பரவி வருகின்றது.