சீனாவின் சமூக வலைத்தளம் வீசாட் ரஷ்யாவில் முடக்கம் ஏன்? பரபரப்பு தகவல்
ஃபேஸ்புக்கிற்கு இணையான சீனாவின் சமூக வலைத்தளம் வீசாட், நேற்று முதல் திடீரென ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கண்காணிப்பு அமைப்பிற்கு வீசாட் ஒத்துழைக்க மறுத்ததே இந்த முடக்கத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தகவல் பரிமாற்ற அமைப்பிற்கு தேவையான தகவல்களை வீசாட் வழங்க மறுத்ததால் மே 4-ந்தேதி முதல் சீனாவின் பிரபல சமூகவலைத்தளமான வீசாட்டின் செயலி பயன்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் ரஷ்ய இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்க்டு இன் செயலியை முடக்கிய ரஷ்யா தற்போது இந்த செயலியையும் முடக்கியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோரின் தகவல்களை ரஷ்ய சர்வெர்களில் சேமிப்பிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் ரஷ்யா இந்த செயலியை முடக்கியது.
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வீசாட் செயலி ரஷ்யாவில் அதிக பிரபலமாக இல்லை என்பதால் வீசாட்டுக்கு இதனால் பெரும் பாதிப்பு இல்லை என்றும்,ம் ரஷ்ய, சீன சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே இந்த முடக்கத்தால் பாதிப்பு என்றும் கூறப்படுகிறது.