ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் புதினுக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளின் உறவு தன்னுடைய பயணம் மேலும் வலுப்படுத்தும் என்றும், பிரதமர் மோடியுடன் ஏற்படுத்த இருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு, ராணுவம், தொழில்நுட்பம் போன்ற ஒப்பந்தங்கள் இருநாட்டு உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதின் வருகை குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறும்போது, புதினுடன் ஏற்பட இருக்கும் சந்திப்பு ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றார். புதின் சந்திப்பின்போது அணுசக்தி, ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் ராணுவ வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களுக்கு சந்திப்பின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
மோடி பிரதமர் ஆனபின்னர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.