மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா காரணம் இல்லை. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள்

MH 17  16மலேசிய விமானம் MH 17 கடந்த வியாழக்கிழமை ஏவுகணை ஒன்றினால் தாக்கப்பட்டு 298 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ரஷ்யா நேரடியாக சம்மந்தப்படவில்லை என அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக விபத்து நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,  உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆயுதங்கள் கொடுத்து உதவி வருகிறது என்பது உண்மைதான் என்றாலும், மலேசிய விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் நேரடி தொடர்பு எதுவும்  உள்ளதாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ரஷ்யாவின் தயாரிப்பு என்பதும் உறுதிசெய்யப்படவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சமூக வலைத்தள தொடர்புகள், தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்டவைகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர்கள் மலேசிய பயணிகள் விமானத்தை போர் விமானம் என தவறாக கருதி தாக்கியிருக்க வேண்டும் என்றும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக ரஷ்ய எல்லையின் வழியாக கிழக்கு உக்ரைனுக்கு ஏராளமான டாங்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது என்றும், கிளர்ச்சியாளர்களுக்கு தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்தோவ் நகரில் அமைந்திருக்கும் ராணுவ மையத்தில் பயிற்சி அளித்துள்ளது என்றும் தெரிய வருகிறது. –

Leave a Reply