வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க அரசின் உளவு நிறுவனம் வேவு பார்த்தது முதல் அமெரிக்காவின் பல ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளர் ஸ்னோடென். அமெரிக்க அரசு இவரை கைது செய்ய தேடியபோது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இவருக்கு ரஷ்ய அரசு பாதுகாப்பு கொடுத்ததோடு பணியும் கொடுத்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஸ்னொடென்னுக்கு ரஷ்யா மேலும் 3 ஆண்டு அடைக்கலம் கொடுக்கும் நீடிப்பு உத்தரவை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஸ்னோடென்னின் ரஷ்ய வழக்கறிஞர் அனடாலி குச்சரேனா தெரிவித்துள்ளார்.
ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் என அமெரிக்க அரசின் கோரிக்கையை மறுத்துள்ள ரஷ்ய அரசு, மேலும் மூன்று வருடங்கள் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளதால் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தால் ஏற்கனவே ரஷ்ய – அமெரிக்க உறவு இழுபறியாக உள்ள நிலையில் ஸ்னோடென்னுக்கு நீடிப்பு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது..