காஷ்மீர் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது. அதிபர் புதின் திட்டவட்டம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகாலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுமாறு அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இந்தியா இந்த பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என்று கூறி வருகிறது.
இந்த நிலையில் ‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் காஷ்மீர் பிரச்னையை, அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் ரஷ்யா கண்டிப்பாக தலையிடாது’ என்றும் ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபரை சந்தித்த வெளியுறவுத் துறை அதிகாரி நபீஸ் சகாரியா, காஷ்மீர் பிரச்சனையில் ரஷ்யா தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.