வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா எதிர்ப்பு: சிக்கலில் அமெரிக்கா

வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா எதிர்ப்பு: சிக்கலில் அமெரிக்கா

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகளை சோதனை செய்து வரும் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா, ஐநாவை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை சரியான தீர்வு இல்லை என ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

இதில், வடகொரியாவுக்கு பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க பிரதிநிதி கேட்டுக் கொண்டார். அமெரிக்காவின் கோரிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் துணை தூதர் விளாடிமிர் கூறுகையில், ‘வடகொரியா மீதான புதிய பொருளாதார தடையை எதிர்ப்பதாக தெரிவித்த அவர், வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.

டிரம்ப் அதிபர் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் வடகொரியா பிரச்சனையால் தற்போது மீண்டும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply