ரஷ்யாவில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் பறிமுதலா?
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதன் ஒரு நடவடிக்கையாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, அமெரிக்காவின் தூதர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
இதன்படி ரஷியாவில் தங்கியுள்ள 30 அமெரிக்க தூதர்கள் விரைவில் வெளியேற்றப்படவுள்ளதாகவும், அதுமட்டுமின்றி ரஷியாவில் இருக்கும் அமெரிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.