1450 ஆம் ஆண்டு தயாரான பைபிள் திருட்டு. ரஷ்யாவில் 3 பேர் கைது

bibleஜெர்மனியின் ஜோகனஸ் குடென்பெர்க் என்பவரால் 1450ஆம் ஆண்டு  தயாரிக்கப்பட்ட பைபிள் ஒன்று ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்த பைபிள் கடுமையான பாதுகாப்பையும் மீறி கடந்த 2009ஆம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் திருடிச்சென்றுவிட்டனர். இந்த பழமையான பைபிளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்த ரஷ்ய போலீஸார், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 3 பேர்களை கைது செய்தனர்.

இந்த பழமையான பைபிளை ரூ.7 கோடிக்கு செல்வந்தர் ஒருவரிடம் விற்க முயற்சி செய்தபோது போலீசாரிடம் இந்த பைபிள் திருடர்கள் பிடிபட்டனர். அதை தொடர்ந்து திருடர்கள் மீது மாஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நிதிபதி செர்ஜி வெடிஷ் சேவ் என்ற திருடனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், மற்ற 2 பேருக்கு குறைந்த கால தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அளித்தார்.

Leave a Reply