வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு

வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு

அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் கொட்டத்தை அடக்க அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

இதற்காக அமெரிக்க ராணுவத்தின் போர்க்கப்பல் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கையும், பொருளாதாரத்தடையும் தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. ஒருவேளை வடகொரியா-அமெரிக்கா போர் ஏற்பட்டால் இந்த போருக்கு ரஷ்யா ஆதரவு கொடுக்காது என்று கூறப்படுகிறது.

Leave a Reply