அமெரிக்க படை மீது தவறுதலாக தாக்குதல் நடத்திய ரஷ்யா. ;அமெரிக்காவின் ரியாக்ஷன் என்ன?
ஐ.எஸ். தீவிரவாத படைகள் என தவறாக நினைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம், நேற்று சிரியாவில் உள்ள கிராமத்தை குறிவைத்து ஒரு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் சிரிய-அமெரிக்க கூட்டு படையில் சிலர் காயமடைந்ததாக ராணுவ தலைமைத் தளபதி ஸ்டீபன் டவுண்சென்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்ய தாக்குதல் தொடங்கப்பட்ட சில நேரத்திலேயே ரஷ்ய ராணுவத்தை தொடர்பு கொண்ட அமெரிக்கா, ரஷ்ய ராணுவத்தின் தவறை எடுத்துரைத்தது. இதனால் ரஷ்ய ராணுவம் உடனடியாக தனது தாக்குதலை நிறுத்திக்கொண்டது.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க ஆதரவு படைகள் மீது தவறுதலாக ரஷ்ய ராணுவம் வானில் இருந்து குண்டுமழை பொழிந்ததாகவும், இந்த பிரச்சனையை சுமூகமாக இரு நாடுகளும் முடித்துக்கொண்டதாகவும், ஊடகங்கள் இதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.