எகிப்து நாட்டில் நொறுங்கி விழுந்த ரஷ்ய பயணிகள் விமானம். 224 பேர் கதி என்ன?

எகிப்து நாட்டில் நொறுங்கி விழுந்த ரஷ்ய பயணிகள் விமானம். 224 பேர் கதி என்ன?
russia
கடந்த சில மாதங்களாக விமான விபத்துக்கள் அதிகரித்து விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை ஒரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விமானத்தில் இருந்த 7 ஊழியர்கள் உள்பட 224 பேர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இன்று காலை ரஷ்ய விமானம் ஒன்று எகிப்து நாடின் ஷாம் எல் ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டஸ்பெர்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 224 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்த விமானம்  சினாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவலை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், விமான விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் தேடுதல் குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

Leave a Reply