ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியாவிற்கு வருகிறார். கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பது குறித்து அவர் நரேந்திரமோடி மற்றும் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இன்று டெல்லி வரும் ரஷ்ய துணை பிரதமர், முதலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கும் ரஷ்ய துணை பிரதமர், இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ரஷ்யா ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்வதற்கு மோடி தனது கண்டனத்தை ரஷ்யாவுக்கு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை செய்கின்றனர். இந்த புதிய அணு உலைகள் தொடர்பான காண்ட்ராக்ட்டுகள் விரைவில் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.