அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சியா?
அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா இணையதள ஹேக்கர்களின் மூலம் முயற்சி செய்து வருவதாக அதிபர் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘அமெரிக்க அரசின் கம்ப்யூட்டர்களை மட்டுமல்ல, தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்குள்ளும் ரஷியாவை சேர்ந்தவர்கள் ஊடுருவி உளவுபார்த்து வருவதாக நமக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், இப்படி ஒற்றறிந்து கசியும் தகவல்களை எல்லாம் அவர்கள் சேகரிக்கும் நோக்கம் என்னவென்று நான் நேரடியாக கூற இயலாது.
ஆனால், எனக்கு தெரிந்தவரையில் நமது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் புதினைப்பற்றி
அடிக்கடி மிக உயர்வாக பேசி வருகிறார். இதன் அடிப்படையில் டிரம்ப்புக்கு ரஷியாவில் ஏகப்பட்ட ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது, அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷியா சதி செய்கிறதா? என்ற உங்களின் (நிருபரின்) கேள்விக்கு ‘எதுவும் சாத்தியமே’ என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.