பிரதமர் மோடியின் யோகா ஆர்வம். ரஷ்ய அதிபர் புதின் ஆச்சர்யம்

yogaஇன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம்’ அனுசரிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சி சற்று முன் புதுடில்லியில் நடந்தது. யோகாவுக்கென தனி அமைச்சகமே அமைத்த பிரதமர் மோடி, யோகா குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இந்திய பிரதமரின் இந்த நடவடிக்கையை பார்த்து ரஷ்ய அதிபர் புதின் ஆச்சரியம் அடைந்துள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் மோடி குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது, யோகாவுக்கென தனி அமைச்சகம் அமைத்து அவரே யோகா நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகப்பெரிய ஆச்சரியத்தை தனக்கு அளித்துள்ளதாக கூறினார். மேலும் மோடி மிகவும் நல்ல மனிதர் என்றும் தனக்கு சிறந்த நண்பர்’ என்றும் புதின் பதில் அளித்தார்.

‘நீங்களும் மோடியும் கடுமையான அரசியல் தலைவர்கள் என்று கூறுகிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த புதின் ‘நான் முரட்டுத்தனமானவன் இல்லை. நான் எப்போதும் விட்டுக்கொடுத்து செல்ல விரும்புவேன். ஆனால், பல நேரங்களில் எதிர் தரப்பில் இருப்பவர்கள்தான் கடினமான நிலையை எடுக்கின்றனர்’ என்று புதின் தெரிவித்தார்.

Leave a Reply