22 நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய ரஷ்ய சிறுவன் பரிதாப பலி

22 நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய ரஷ்ய சிறுவன் பரிதாப பலி
videogame
தற்கால சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு கொடிய வியாதி வீடியோ கேம். முதலில் பொழுதுபோக்கு என்று ஆரம்பிக்கும் இந்த வீடியோ கேம் விளையாட்டிற்கு பலர் அடிமையாகி, தங்கள் வாழ்க்கையின் லட்சியங்களையே இழந்து நிற்கின்றனர். மேலும் ஒருசிலர் மணிக்கணக்கில் தூங்காமல், சாப்பிடாமல் இந்த விளையாட்டை விளையாடுவதால் சில நேரங்களில் உயிரையும் இழக்கும் கொடுமையும் நடந்து வருகிறது. அந்த வகையில் கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த ரஷ்ய சிறுவன் திடீரென உயிரிழந்தார்.

ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்வன். தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக ‘டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்’ என்னும் பழங்கான போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்து நாட்கணக்கில் விளையாடுவதும் உண்டு.

இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், பின்னர் பொழுது போகாததால் அந்த விளையாட்டே கதி என கிடந்துள்ளான்.

சாப்பிடும் நேரம் மற்றும் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரம் எல்லாம் வீடியோ கேம் தான். இவ்வாறு தொடர்ந்து 22 நாட்கள் கடந்த நிலையில், கடந்த 30ம் தேதி சிறுவனின் அறையில் வீடியோ கேம் விளையாடும் சத்தம் வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, சிறுவன் ருஸ்டம் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்தான். உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவன் இறந்துவிட்டான். ஒரே இடத்தில் பல நாட்களாக அமர்ந்திருந்ததால் ரத்த உறைவு ஏற்பட்டு அவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply