19 டன் எடையுள்ள டிராம் காரை கயிற்றை கட்டி இழுத்த ரஷ்ய கல்லூரி மாணவி

19 டன் எடையுள்ள டிராம் காரை கயிற்றை கட்டி இழுத்த ரஷ்ய கல்லூரி மாணவி
russia
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுமார் 19 டன் எடையுள்ள டிராம் கார் ஒன்றை தனது வயிற்றில் கட்டிய கயிறு ஒன்றின் உதவியால் 16.4அடி தூரம் இழுத்து சாதனை செய்துள்ளார். இந்த சாதனை ரஷ்ய நாட்டின் புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கல்லூரி மாணவியான Irkutsk native Oksana Kosheleva என்பவர் முதலில் 22 டன் எடையுள்ள விமானம் ஒன்றை இழுக்கத்தான் முயற்சி செய்ததாகவும், ஆனால் அவருடைய கோச் அறிவுரையின்படி முதலில் 18.7 டன் எடையுள்ள டிராம் காரை இழுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்த முறை விமானத்தை இதேபோல் இழுத்து சாதனை செய்ய வேண்டும் என்றும் விரைவில் கின்னஸ் சாதனை புரியவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அளவில் புதிய சாதனை செய்த Irkutsk native Oksana Kosheleva என்ற மாணவிக்கு கல்லூரியில் இருந்தும், நாட்டின் பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் அவர்களும் இந்த இளம்பெண்ணை பாராட்டியுள்ளார்.

Leave a Reply