ரஷ்ய தூதரை சுட்டு கொலை செய்த துருக்கி போலீஸ்.
துருக்கி நாட்டிற்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோ என்பவரை பணியில் இல்லாத துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்ததால் இருநாடுகளுக்கு இடையே பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காரா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற புகைப்பட கண்காட்சி ஒன்றில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிள் திடீரென கண்மூடித்தனமாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
துருக்கி போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் சுட்டுக்கொன்ற நபர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் தான் அவர் பணியில் இல்லாத துருக்கி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோ சம்பவ இடத்திலேயே குண்டுகளால் துளைக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவருடன் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.