எஸ்.வி.சேகருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பா? நீதிபதி உத்தரவு
நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் இலங்கையின் இறுதிப்போரில் மரணம் அடைந்த இசைப்பிரியாவின் மரணத்தை தழுவி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படம் தணிக்கைக்கு வந்தபோது இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க எஸ்.வி.சேகர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எஸ்.வி.சேகருக்கு கடந்த சில தினங்களாக தொலைபேசி மற்றும் இமெயில் மூலம் மர்ம நபர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தனக்கு ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு தேவை என எஸ்.வி. சேகர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகரின் மனுவை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary: Chennai High court important order about S.V.Sekhar defense requested case