சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

22ptkrk05-nirap_23_2483130fசபரிமலையில் நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. 17 முதல் 21 வரை ஆடி மாத பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் முடிந்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து வந்த நெற்கதிர்கள் கோயில் முன்புறம் உள்ள முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.பின் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் நெற்கதிர்களை சுமந்து கோயிலுக்குள் கொண்டு சென்றனர். அங்கு ஐயப்பன் விக்ரகம் முன் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. படிபூஜை, அத்தாழ பூஜைக்கு பின் இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படும்.

Leave a Reply