சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புது÷ சரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, ÷ தவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை என 18 மலை தேவதைகள் குடிகொள்ளும் படியாக க ருதப்படுகிறது. விரதமிருந்து இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே இந்த படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லும் இந்த 18 படிகளுக்கு புதிதாக ஐம்பொன் பதிக்கப்பட்டது. ஜொலிக்கும் இந்த படிகளுக்கு இன்று காலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.