சபரிமலை: வரும் 2016-ல் சபரிமலையில் நடை திறக்கும் நாட்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
அதன் விபரம்:
ஜனவரி: 2015 டிச., 30- மாலை முதல் ஜன., 20 காலை 7 மணி வரை.
பிப்ரவரி: மாசிமாத பூஜைக்காக 13ம் தேதி முதல் 18 வரை.
மார்ச்: பங்குனி மாத பூஜை, பங்குனி உத்திர திருவிழா. 13ம் தேதி முதல் 23 வரை. 14-ல் கொடியேற்றி, 23-ல் ஆராட்டு.
ஏப்ரல்: சித்திரை மாத பூஜை, விஷூ பூஜை. 10ம் தேதி முதல் 18 வரை. 14ல் சித்திரை விஷூ.
மே: வைகாசி மாத பூஜைக்காக 14ம் தேதி முதல் 19 வரை.
ஜூன்: பிரதிஷ்டை தினபூஜை, வைகாசி பூஜை. 13ம் தேதி முதல் 19 வரை. 14ல் பிரதிஷ்டை தினம்.
ஜூலை: ஆடி மாத பூஜைக்காக 15ம்தேதி முதல் 19 வரை.
ஆகஸ்ட்: ஆவணி மாத பூஜைக்காக 16ம் தேதி முதல் 21 வரை.
செப்டம்பர்: திருவோண பூஜை, புரட்டசி மாத பூஜை. 12ம் தேதி முதல் 21 வரை.
அக்டோபர்: ஐப்பசி மாத பூஜைக்காக 16ம் தேதி முதல் 21 வரை.
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை 29ம் தேதி முதல் 30 வரை.
நவம்பர், டிசம்பர்: மண்டல பூஜை. நவ.,15 முதல் டிச.,26 வரை. மகரவிளக்கு கால பூஜைக்காக டிச., 30 மாலை மீண்டும் நடை திறக்கும்.
எல்லா மாதங்களிலும், முதல் நாள் மாலை 5.30- மணிக்கு நடை திறக்கப்படும். இறுதி நாள் இரவு 10 க்கு அடைக்கப்படும்.