சச்சின் பதிவு செய்த ரூபாய் 14 கோடி நஷ்ட ஈடு வழக்கு

திடீர் திருப்பம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றின் மீது ரூபாய் 14 கோடி கேட்டு தொடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

தன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிந்த பிறகும் தன்னுடைய புகைப்படத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் என்ற நிறுவனம் பயன்படுத்துவதாகவும் இதனால் அந்நிறுவனம் தனது 14 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சிட்னி நீதிமன்றத்தில் சச்சின் வழக்கு தொடுத்திருந்தார்

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே ஸ்பார்டன் நிறுவனம் சமாதானத்திற்கு முன்வந்து தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டது

இதனை அடுத்து சச்சின் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சம்மதம் தெரிவித்தார். இந்த செய்தி ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply