பொறியாளர்களின் உதவியால் சச்சின் உருவாக்கிய பிஎம்டபிள்யூ கார்.

sachin

பிரபலங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் ஒரு கார் பிஎம்டபிள்யூ என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த கார் தற்போது 50 சதவீதம் உள்ளூர் உதிரிபாகங்களைக் கொண்டு “மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை செங்கல்பட்டை அடுத்த மகேந்திராசிட்டியில் இந்த நிறுவனத் தொழிலகத்தில் நடைபெற்ற விழாவில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பொறியாளர்களின் உதவியுடன் இந்த காரை வடிவமைத்தார்.

பின்னர் சச்சின் இந்த விழாவில் பேசியபோது, “பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனத்தின் காரை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தேன். இதை உருவாக்குவது மிகுந்த தனித்துவம் மிக்கது. இதை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. காரை ஓட்டும்போது, நான் ஒரு காரை உருவாக்கினேன் என்று கூறுவேன் என்றார்.

இதையடுத்து, இந்தியாவின் நிறுவனத் தலைவர் பிலிப் பேசுகையில், 6 வகை உதிரிபாகங்கள் இந்தியத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என்றார்.

“சர்வதேசத் தரநிலைகள் கொண்ட நவீன செய்முறையில் உயர்திறன் கொண்ட பணியாளர்களால் அதிசிறந்த தொழில்நுட்ப கார்களை உருவாக்குவோம்’ என்று நிறுவனத்தின் சென்னை வளாகத்தின் மேலாண்மை இயக்குநர் ராப்ர்ட் ஃபிரிட்ராங் தெரிவித்தார்.

Leave a Reply