இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல அற்புதமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை கிளப் அணியுடன் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்க உள்ளார்.
மும்பையின் வார்லி கிரிக்கெட் கிளப் அணியை அர்ஜூன் டெண்டுல்கர் வழி நடத்தி செல்ல உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
15 வயதே ஆன அர்ஜூன், கடந்த தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்திலும் அதிக ரன்களை குவித்ததாக, மும்பை கிரிக்கெட் கிளப் அணியின் உரிமையாளர் அவினாஸ் கதம் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க பள்ளி அணிகளுக்கு எதிராக 10 போட்டிகள் கொண்ட தொடரில் மும்பை கிளப் அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் நாளை முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.