கேரள கவர்னராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.சதாசிவத்தை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், மத்திய அரசு அவரை கவர்னராக நியமித்து நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்த முறையான உத்தரவில் நேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். நாளை பி.சதாசிவம் கேரள மாநில ஆளுனராக பதவியேற்க உள்ளார்.
தன்னை ஆளுனராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தான் பதவியேற்றவுடன் உரிய விளக்கம் தரவுள்ளதாக பி.சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் நேற்று டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” தலைமை நீதிபதியாக இருந்துவிட்டு கவர்னராக பொறுப்பேற்பது எனக்குத் தவறாகத் தெரியவில்லை. என்னுடைய 19 ஆண்டு கால அனுபவம் கவர்னர் பதவிக்கு உதவும். கேரள மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக செயல்படுவேன். கேரள மக்களுக்கு என்னால் அதிக உதவி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
சதாசிவம் அவர்களின் ஆளுனர் நியமனத்திற்கு எதிராக பார் அசோஷியேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.