20 பந்துகளில் சதம்: இந்திய வீரரின் உலக சாதனை

20 பந்துகளில் சதம்: இந்திய வீரரின் உலக சாதனை

இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நாக்பூர் ரெயில்வேஸ் – மோகுன் பகன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மோகுன் பகன் அணியின் விருத்திமான் சஹா, சுபோமோய் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சஹா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மோகுன் பகன் அணி 7 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சஹா 20 பந்துகளை சந்தித்து 14 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். சன் ரைசஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் சஹா விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply