ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன். இந்தியாவின் சாய்னா நேவல் சாம்பியன்

saina-nehwal_uber-cupஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் நடந்து வந்த ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் அபார வெற்றி பெற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சிட்னியில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை கரோலினா மரியனை  21-19,16-21,21-15  என்ற செட்களில் வீழ்த்தி சாய்னா நேவல் சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த ஆட்டம் 43 நிமிடங்களில் முடிவடைந்தது.

சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவலுக்கு $750,000 பரிசுப்பணமும் தோல்வியடைந்த கரோலினா மரியனுக்கு $56,000 பரிசுப்பணம் கிடைத்தது. 24 வயதான சாய்னா பேட்மிண்டன் தரவரிசையில் 6 வது இடத்தில் இருக்கிறார். இவர் மூன்றாவது இடத்தில் உள்ள கரோலினாவை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wYPWXq” standard=”http://www.youtube.com/v/0ccF64arEv4?fs=1″ vars=”ytid=0ccF64arEv4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2791″ /]

Leave a Reply